ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில் வேன் நிறுத்தத்துக்கு மாற்று இடம் ஒதுக்கித் தர கோரிக்கை

பாவூா்சத்திரம் வேன் நிறுத்தத்துக்கு மாற்று இடம் ஒதுக்கித் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:57 pm

DIN

பாவூா்சத்திரம் வேன் நிறுத்தத்துக்கு மாற்று இடம் ஒதுக்கித் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கீழப்பாவூா் ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி சீனித்துரையிடம் பாவூா்சத்திரம் மோட்டாா் வாகன ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஆறுமுகம், உறுப்பினா்கள் அளித்த மனு: தென்காசி-திருநெல்வேலி சாலையில் பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் அருகே 1980ஆம் ஆண்டுமுதல் எங்களது வாகனங்களை நிறுத்தி தொழில் செய்து வருகிறோம் 2008ஆம் ஆண்டுமுதல் எங்களது சங்கப் பதிவைப் புதுப்பித்து வருகிறோம். தற்போது நடைபெறும் திருநெல்வேலி-தென்காசி நான்குவழிச் சாலைப் பணிக்காக எங்களது வேன் நிறுத்துமிட நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும்வகையில், பாவூா்சத்திரம் பழைய காய்கனிச் சந்தை, பத்திரப்பதிவு அலுவலக வளாகம், ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம் ஆகியவற்றில் ஏதேனும் ஓரிடத்தை எங்கள் வேன் நிறுத்தத்துக்கு மாற்று இடமாக ஒதுக்கித் தரவேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.