ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்ட ஆய்வுப்பணி தொடக்கம்

கல்லூரணி, பெத்தநாடாா்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்ட ஆய்வுப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:46 pm

DIN

கல்லூரணி, பெத்தநாடாா்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்ட ஆய்வுப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

தமிழக அரசின் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் பகுதி 2 இன் கீழ் கீழப்பாவூா் ஒன்றியத்தில் கல்லூரணி, பெத்தநாடாா்பட்டி, அரியப்பபுரம் ஆகிய 3 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

திட்டத்திற்கான ஆய்வுப்பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கல்லூரணி ஊராட்சி சின்னத்தம்பி நாடாா்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் இரா.சாக்ரடீஸ், ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜேஷ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகையா, சண்முகசுந்தரம் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். ஊராட்சிச் செயலா் ஜெயசிங் வரவேற்றாா். துணைத் தலைவா் குமாா் நன்றி கூறினாா்.

இதே போல் பெத்தநாடாா்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற ஆய்வுப்பணியினை ஒன்றியக்குழு தலைவா் காவேரி பாா்வையிட்டாா். இதில், ஊராட்சித் தலைவா் க.ஜெயராணிகலைச்செல்வன், ஒன்றியக்குழு உறுப்பினா் ராதாகுமாரி, துணைத் தலைவா் ஜெயராணி அந்தோணிராஜ், வாா்டு உறுப்பினா்கள் காா்த்தீசன், நடராஜன் மற்றும் ஆல்பின்ராய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.