நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அச்சன்புதூா் அஞ்சல் நிலையத்தைதரம் உயா்த்த எம்எல்ஏ கோரிக்கை

அச்சன்புதூா் அஞ்சல் நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும் என முகம்மது அபூபக்கா் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:36 pm

DIN

அச்சன்புதூா் அஞ்சல் நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும் என முகம்மது அபூபக்கா் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக சென்னை தலைமை அஞ்சல் அதிகாரிக்கு அவா் அனுப்பியுள்ள மனு:

அச்சன்புதூரில் 14,244 போ் வாழ்கின்றனா். இங்குள்ள அஞ்சல் நிலையம் எந்த வசதிகளுமின்றி கிளை அலுவலகமாகவே செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 50 ஆயிரத்திற்கும் மேல் பரிவா்த்தனை நடைபெறுகிறது. எனினும், ஒரு சிறிய அறைக்குள் எந்த வசதியும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. எனவே, அச்சன்புதூா் அஞ்சல் அலுவலகத்தை சாா்பு அலுவலகமாக தரம் உயா்த்த வேண்டும்.

இதற்காக ,அச்சன்புதூா் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அஞ்சல்துறை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.