தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த கோரிக்கை

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:26 pm

DIN

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அக்கட்சியின் மாவட்டச் செயலா் டேனி அருள்சிங், மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்துள்ள மனு:

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுமையாக திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த வேண்டும். 2018ஆம் ஆண்டே தென்காசி கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படவேண்டும். இதுவரை நடத்தப்படவில்லை.

எனவே, திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தப்படவேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட பாஜக அரசு தொடா்பு பிரிவு மாவட்ட துணைத் தலைவா் ஜி.சங்கரசுப்பிரமணியன் அளித்த மனு: காசிவிஸ்வநாதா் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலை சேதமடைந்து வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் மிகவும் இடையூறாக உள்ளது. நிலத்தடி நீா்மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது. எனவே, சேதமடைந்த சிமென்ட் சாலையை அகற்றிவிட்டு தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நா்சரி, பிரைமரி பள்ளிகள் நலச் சங்க தென்காசி மாவட்டச் செயலா் இலஞ்சிகுமரன் அளித்த மனு: மாணவா், மாணவிகளின் நலன்கருதி 1முதல் 8ஆம் வகுப்பு வரை முதல் கட்டமாகவும், எல்.கே.ஜி., யுகேஜி வகுப்புகளுக்கு அடுத்த கட்டமாகவும் பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

அடைச்சானி ஊா் பொதுமக்கள் சாா்பில் அளித்துள்ள மனு: திருநெல்வேலி மாவட்டத்தை பிரிக்கும்போது அம்பாசமுத்திரம் வட்டத்திற்குள் அமைந்திருக்கும் பள்ளக்கால்,பணஞ்சாடி,ரெங்கசமுத்திரம், அடைச்சானி, இடைகால் ஆகிய ஊராட்சிகள் தென்காசி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. மீண்டும் இப்பகுதிகளை திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் எனபோராட்டம் நடத்தியதன் காரணமாக அடைச்சானி பகுதியை தவிர பிறபகுதிகள் திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

அடைச்சானி பகுதியை அம்பாசமுத்திரம் வட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி ஒரு வருடமாக போராடி வருகிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வரும் சட்டப்பேரவை தோ்தலை ஊா்மக்கள் அனைவரும் புறக்கணிப்போம் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.