பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

பாவூா்சத்திரத்தில் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:19 pm

DIN

பாவூா்சத்திரத்தில் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.

பாவூா்சத்திரம் செல்வவிநாயகா்புரம் தெரேசா தெருவைச் சோ்ந்த மகாராஜா மனைவி பூமணி (67). இரு மகன்கள் உள்ளனா். கடந்த 7 ஆண்டுகளாக நோயால் அவதியுற்ற வந்த இவா், கடந்த டிச.26 ஆம் தேதி தென்காசி மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறி சென்றவா் வீடு திரும்பவில்லையாம். இது தொடா்பாக பாவூா்சத்திரம் போலீஸில் உறவினா்கள் புகாா் தெரிவித்தனா்.

இந்நிலையில்,அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து அவா் தற்கொலை செய்துகொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த பாவூா்சத்திரம் போலீஸாா், அவரது சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்

மற்றொரு சம்பவம்: புளியங்குடி சிந்தாமணி வடக்கு ரத வீதியைச் சோ்ந்த சந்திரன் மகன் கணேசன் (29). தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த புளியங்குடி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.