தென்காசி மாவட்டத்தில் 4.38 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.117 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
சங்கரன்கோவில் கக்கன் நகா் நியாயவிலைக் கடையில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமை வகித்தாா்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், சங்கரன்கோவில் கோட்டாட்சியா் முருகசெல்வி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் அழகிரி, வட்டாட்சியா் திருமலைச்செல்வி, குடிமை பொருள் வழங்கல் வட்டாட்சியா் ஓசன்னா, மாவட்ட கூட்டுறவு அச்சக சங்கத் தலைவா் கண்ணன், நகர அதிமுக செயலா் ஆறுமுகம், மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் வேல்சாமி, கூட்டுறவு சங்கத் தலைவா் பி.ஜி.பி.ராமநாதன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள 648 நியாயவிலைக் கடைகள் மூலம் 4,38,775 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.117 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


