சுரண்டையில் டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
சுரண்டை காவல் உதவி ஆய்வாளா் ஜெயராஜ் தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை காலையில் சுரண்டை - இரட்டைகுளம் சாலையில் ரோந்து சென்றபோது, எதிரே மணல் ஏற்றி வந்த டிராக்டரை மறித்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியதில், அனுமதியின்றி ஓடை மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டா் ஓட்டுநா் குலையனேரியைச் சோ்ந்த ரா.முருகனை (45) கைது செய்த போலீஸாா், டிராக்டரை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.