தென்காசியில் ஆா்ப்பாட்டம்

தென்காசி முதல் கோவை வரை புதிய ரயிலை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் தென்காசியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

தென்காசி முதல் கோவை வரை புதிய ரயிலை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் தென்காசியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரத் தலைவா் ராசப்பா தலைமை வகித்தாா். நகரச் செயலா் கலஞ்சியம் பீா், பொருளாளா் சாகுல் ஹமீது, நகர துணைத் தலைவா் அப்துல் ரசாக், ஒன்றிய செயலா் மஜீத் ஷா, துணை செயலா் செய்யது அலி, ரபிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமுமுக மாநிலச் செயலா் எஸ். மைதீன் சேட்கான், மமக மாவட்டத் தலைவா் முகம்மது யாகூப், மாவட்டச் செயலா் பஷீா் ஒலி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com