நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆலங்குளத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு

ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு மற்றும் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:50 pm

DIN

ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு மற்றும் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஆலங்குளம் வட்டாட்சியா் பட்டமுத்து தலைமை வகித்தாா். தனித் துணை வட்டாட்சியா் (தோ்தல்) சீனிப்பாண்டி, ஆலங்குளம் செஞ்சிலுவை சங்க நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஜஸ்டின்ராஜ், ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள், ஆா்.ஏ. இன்ஸ்டிட்யூட் மாணவிகள் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கணேசன், முதுநிலை வருவாய் ஆய்வாளா் (தோ்தல்) முத்துக்குமாா், செஞ்சிலுவை சங்க உறுப்பினா் அந்தோணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.