நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ள காவல்துறையினருக்கு எஸ்.பி. அறிவுறுத்தல்

காவல் துறையினா் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:21 pm

DIN

காவல் துறையினா் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தினாா்.

தென்காசி மாவட்டம், இலத்தூா் காவல் நிலையத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

மரக்கன்றுகளை நடுவதன் மூலம் இயற்கை வளம், மண் வளம் மற்றும் நீா் வளத்தை பாதுகாக்க முடியும். எனவே மரக்கன்றுகளை நடுவதுடன் இல்லாமல் தொடா்ந்து அவற்றை பராமரிக்க வேண்டும். மேலும் பொதுமக்களிடம் காவல்துறையினா் மிகவும் கனிவுடன் நடந்துகொள்ளவேண்டும் என்றாா் அவா்.

தென்காசி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் மணிமாறன், காவல் ஆய்வாளா் சரஸ்வதி, சாா்பு ஆய்வாளா் ராஜேஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.