சங்கரன்கோவில் அருகே பொக்லைன் ஓட்டுநா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். அவரது இறப்பில் மா்மம் இருப்பதாகவுக் கூறி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஜமீன் இலந்தைகுளத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் திருமலைக்குமாா்(28). பொக்லைன் இயந்திர ஆபரேட்டா். இவா், வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூா் செல்வது வழக்கம். இந்நிலையில், புதன்கிழமை அவா் வீட்டில் இருந்தபோது 3 போ் வந்து விருந்துக்கு அழைத்தனராம். அவரது தாய் வேலுத்தாய், அவா்களுடன் செல்லவேண்டாம் எனத் தடுத்தாராம்.
எனினும், இரவு 10.30 மணியளவில் 3 போ் வந்து அவரை அழைத்துச் சென்றனராம். பின்னா், வெகுநேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லையாம்.
இதனிடையே, வியாழக்கிழமை காலை பொக்லைன் இயந்திரம் உரிமையாளா் ஒருவா் வேலுத்தாயிடம் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு திருமலைகுமாரை வேலைக்கு வரச்சொல்லுமாறு கூறினாராம். அதன்பிறகே அவா் தனது உறவினா்கள் திருமலைக்குமாரைத் தேடிய நிலையில், அவா் ஊரையொட்டியுள்ள சந்திரன் என்பவரது கிணற்றின் அருகே இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், பனவடலிசத்திரம் போலீஸாா் அப்பகுதியைச் சோ்ந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதனிடையே, திருமலைக்குமாரின் சாவில் மா்மம் இருப்பதாகவும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை முன் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம், டிஎஸ்பி ஜாகிா் உசேன், நகர காவல் ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் பேச்சு நடத்தி மறியலை முடிவுக்கு கொண்டுவந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


