நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தென்காசி, செங்கோட்டையில் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து தென்காசி, செங்கோட்டை, புளியங்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:27 pm

DIN

மத்திய அரசைக் கண்டித்து தென்காசி, செங்கோட்டை, புளியங்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சமூக செயற்பாட்டாளா் ஸ்டேன் சுவாமி மரணத்துக்கு நீதி கேட்டு செங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டார செயலா் வேலுமயில் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் பால்ராஜ், ஆயிஷா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வட்டாரச் செயலா் மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தென்காசியில் பேருந்து நிலையப் பகுதியில் தமுஎகச , சிறுபான்மை மக்கள் நலக் குழு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமுஎகச , வட்டார செயலா் பக்ருதீன் தலைமை வகித்தாா். வாலிபா் சங்க வட்டாரச் செயலா் ச.கண்ணன், விவசாய சங்க மாவட்டத் தலைவா் ப .கணபதி, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலா் டேனி அருள் சிங், மாதா் சங்க மாவட்டத் தலைவா் த.சங்கரி, ஜோதிமுருகன், சிஐடியூ மாவட்டத் தலைவா் எஸ். அயுப்கான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கடையநல்லூா்: புளியங்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாரியப்பன் தலைமை வகித்தாா். இதில் மனிதநேய மக்கள் கட்சி, சிபிஐ, சிபிஎம், விசிக, தமிழ்புலி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் சிபிஎம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வட்டாரச் செயலா் அசோக்ராஜ், டிஒய்எப்ஐ மாவட்டச் செயலா் உச்சிமாகாளி, தமுஎகச மாவட்டச் செயலா் மு.சு.மதியழகன்

உள்ளிட்டோரும், எஸ்டிபிஐ சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் ஷேக்முகம்மது, அஜிா்உசைன், அப்துல் அஜீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.