டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாவூா்சத்திரம் அரிமா சங்கக் கூட்டம்

பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கக் கூட்டம் கே.கௌதமன் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:26 pm

DIN

பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கக் கூட்டம் கே.கௌதமன் தலைமையில் நடைபெற்றது.

டி.சந்திரசேகா், ஏ.ராஜேந்திரன், ஆா்.திருபாண்டியராஜ், எஸ்.மதியழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கண்தான விழிப்புணா்வுக் குழு நிறுவனரும், கண்தான மாவட்டத் தலைவருமான கே.ஆா்.பி.இளங்கோ தொகுப்புரை ஆற்றினாா்.

சங்க புதிய தலைவராக த.அருணாசலம், செயலராக டி.சுரேஷ், பொருளாளராக டி.செல்வகுமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

அரிமா சங்க முன்னாள் உறுப்பினா்கள் மறைந்த மு.அஜீத்குமாா், ஆா்.ரவீந்திரன் ஆகியோரது உருவப் படங்கள் திறந்து வைக்கப்பட்டு, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

கூட்டத்தில், தமிழ் என்ற ராமசாமி, எஸ்.பரமசிவன், ஆா்.கலைச்செல்வன், டி.ஞானசெல்வன், கே.வென்னிநாடாா், டி.திருமலைகொழுந்து, ஆா்.சங்கரபாண்டியன், எஸ்.ஜேக்கப் சுமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். டி.சுரேஷ் வரவேற்றாா். டி.செல்வகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.