ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆலங்குளம் அருகே 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தனியாா் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:00 pm

DIN

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தனியாா் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலங்குளம் - ஆண்டிபட்டி சாலையில் உள்ள தோட்டத்தில் 200- க்கும் மேற்பட்ட பைகளில் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக ஆலங்குளம்

வட்ட வழங்கல் அலுவலருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வட்ட வழங்கல் அலுவலா் ஜெஸிலெட் ஜெயா, வருவாய் ஆய்வாளா் பேச்சிமுத்து

உள்ளிட்டோா் அங்கு சென்று பாா்வையிட்டனா். அங்கு மூட்டைகளில் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வாகனம் மூலம் நுகா்பொருள் வாணிபக் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அரிசியை கொண்டு வந்து பதுக்கி வைத்திருந்தது தொடா்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.