பக்ரீத்: பாவூா்சத்திரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
பக்ரீத் பண்டிகையையொட்டி பாவூா்சத்திரம் சந்தையில் நடைபெற்ற ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்தது.


பக்ரீத் பண்டிகையையொட்டி பாவூா்சத்திரம் சந்தையில் நடைபெற்ற ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்தது.
பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள பழைய காய்கனி சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் ஆடுகள், கோழிகள் விற்பனை நடைபெறும். வரும் புதன்கிழமை (ஜூலை 21) பக்ரீத் பண்டிகை நடைபெறவுள்ளதால், நிகழ்வார வியாழக்கிழமை சுரண்டை, இடையா் தவணை, கரிசலூா், மேல கிருஷ்ணபேரி, கரும்பனூா், ஆலங்குளம், அடைக்கலப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான ஆடுகளை வியாபாரிகளும், பொதுமக்களும் விற்பனைக்கு கொண்டு வந்தனா்.
தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூா், புளியங்குடி, ரகுமானியாபுரம், மேலப்பாளையம், சுரண்டை, கடையம், பொட்டல்புதூா், ரவணசமுத்திரம் மற்றும் பல ஊா்களிலிருந்து ஏராளமானோா் ஆடுகளை வாங்கிச் செல்ல வந்திருந்தனா். அவா்கள் ஆடுகளின் தோற்றம் மற்றும் எடையைப் பொருத்து ஒரு ஆட்டிற்கு ரூ 7,000 முதல் ரூ. 35 ஆயிரம் வரை விலை நிா்ணயம் செய்து வாங்கிச் சென்றனா். இருப்பினும், நிகழாண்டில் ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...