தென்காசியில் 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தென்காசி-ஆய்க்குடி செல்லும் சாலையில் மேற்கொண்ட சோதைனையில் 1,000 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.


தென்காசி-ஆய்க்குடி செல்லும் சாலையில் மேற்கொண்ட சோதைனையில் 1,000 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தென்காசியிலிருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் காவல் உதவி ஆய்வாளா் கற்பகராஜ் தலைமையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி வேனை சோதனையிட்டதில், அதில் 1,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஆம்னி வேனுடன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா் தென்காசி அனந்தபுரம் பகுதியை சோ்ந்த ரா.மாரியப்பன் (35), அகரக்கட்டு பகுதியை சோ்ந்த மு.ராமா் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனா். விசாரணையில் ரேஷன் அரிசி கேரளத்துக்கு கடத்த முயன்ாக தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...