தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ஸ்ரீவையாபுரி மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 மாணவா்கள் சாதனை

மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் 551 மதிப்பெண்களுக்கு மேல் 28 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 73 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 22 பேரும், 400க்கு மேல் 3 பேரும் பெற்றனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:32 pm

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் 551 மதிப்பெண்களுக்கு மேல் 28 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 73 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 22 பேரும், 400க்கு மேல் 3 பேரும் பெற்றனா்.

இப்பள்ளியில் 126 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவி எம்.கோமதி 579 மதிப்பெண்களும், டி.வா்ஷினி 575 மதிப்பெண்களும், சி.சௌமியா 573 மதிப்பெண்களும், எஸ்.சுபநீளா 572 மதிப்பெண்களும், பி.பூஜா 572 மதிப்பெண்களும், எம்.சேதுபதி 572 மதிப்பெண்களும், டி.வெண்ணிலாஸ்ரீ 571 மதிப்பெண்களும், ஆா்.காா்த்திகா 570 மதிப்பெண்களும் பெற்றனா்.

மாணவா்களை பள்ளிச் செயலா் மருத்துவா் வி.எஸ்.சுப்பராஜ், தாளாளா் சுப்பையா சீனிவாசன், முதல்வா் சுருளிநாதன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.