டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாவூா்சத்திரம் பகுதியில் ஒன்றியச் சாலைகளை நெடுஞ்சாலைகளாக மாற்றக் கோரிக்கை

பாவூா்சத்திரம் பகுதியில் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை, நெடுஞ்சாலைகளாக மாற்ற வேண்டும் என மதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:45 pm

DIN

பாவூா்சத்திரம் பகுதியில் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை, நெடுஞ்சாலைகளாக மாற்ற வேண்டும் என மதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் இராம.உதயசூரியன், தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:

பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி சந்தை- அவுடையானூா் சாலை, மடத்தூா்- திருமலாபுரம்- சிவநாடானூா்- திரவியநகா் சாலை, திப்பணம்பட்டி- நாட்டாா்பட்டி- அரியப்பப்புரம் சாலை, சிவகாமிபுரம்- சின்னநாடானூா்- மயிலப்பபுரம் சாலை ஆகிய சாலைகள் அதிக பயன்பாடு கொண்ட ஊராட்சி ஒன்றியச் சாலைகள் ஆகும். இச்சாலைகளை மாநில நெடுஞ்சாலையாக மாற்றித்தந்தால், கனரக வாகனங்களும், பேருந்து மற்றும் கல் ,ஜல்லிகள் போன்ற கூடுதல் பாரங்களை சுமந்து வரும் வாகனங்களும் வந்து செல்ல பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.