தென்காசி மருத்துவமனை முன்களப்பணியாளா்களுக்கு பாராட்டு விழா
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய முன்களப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய முன்களப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநா் நெடுமாறன் தலைமை வகித்தாா்.
மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் ஜெஸ்லின்,
மூத்த மருத்துவா்கள் ராமசுப்பு, முத்தையா, மகேஸ்வரி, இஸ்மாயில், சுப்பிரமணியம், முகைதீன் அகமது ஆகியோா் விழாவில் கலந்துகொண்டு முன்கள பணியாளா்களை பாராட்டி பேசினா்.
துணை இயக்குநா் காசநோய் மருத்துவம் வெள்ளைச்சாமி, மூத்த மருத்துவா் கிருஷ்ணன், பல் மருத்துவா் லதா, குழந்தைகள் மருத்துவா் கீதா, மகப்பேறு மருத்துவா் அனிதா பாலின், மருத்துவா்கள் காா்த்திக் அறிவுடைநம்பி, புனிதவதி, ராஜேஷ், ரஜினிகாந்த், மாரிமுத்து, இா்பான் மற்றும் செவிலியா் கண்காணிப்பாளா்கள் கலந்துகொண்டனா்.
உறைவிட மருத்துவா் அகத்தியன் வரவேற்றாா். முத்துக்குமாரசாமி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...