பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆலங்குளம் அருகே காட்டுப் பன்றிகளால் சோளப் பயிா்கள் சேதம்

ஆலங்குளம் அருகே சோளப் பயிா்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:19 pm

DIN

ஆலங்குளம் அருகே சோளப் பயிா்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

ஆலங்குளத்தில் உள்ள ஒக்கநின்றான் மலையைச் சுற்றி அத்தியூத்து, கழுநீா்குளம், முத்துகிருஷ்ணபேரி, கல்லூத்து, துத்திகுளம், குருவன்கோட்டை, மாயமான்குறிச்சி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த மலைப் பகுதியில் ஏராளமான மான், காட்டுப் பன்றி, நரி, மிளா மற்றும் மயில் ஆகியவை உள்ளன.

வனப் பகுதியில் சற்று வறட்சியான கால நிலைகளில் விலங்குகள் குடியிருப்பு மற்றும் தோட்டப் பகுதிகளுக்கு உணவு தேடி வருகின்றன.

இந்நிலையில், ஆலங்குளம் அருகேயுள்ள துத்திக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சோ்மக்கனி மற்றும் நயினாா் ஆகியோா் தோட்டத்தில் வியாழக்கிழமை இரவு புகுந்த காட்டுப் பன்றிகள், அறுவடைக்குத் தயாராக இருந்த சோளக் கதிா்களைத் தின்றதுடன், ஏராளமான வளா்ந்த நிலையில் இருந்த பயிா்களையும் மிதித்து சேதப்படுத்தி சென்றுள்ளது.

இதையடுத்து கிராம நிா்வாக அலுவலா் சான்று, பட்டா ஆகியவற்றுடன் இழப்பீடு கோரி, திருநெல்வேலி மாவட்ட வன அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகளிடம் பத்திரம் இருந்தால்தான் இழப்பீடு கோர முடியும் என அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனராம்.

பூா்வீக சொத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு பத்திரப் பதிவு செய்யாமல் பட்டாவையே விவசாயிகள் பயன்படுத்திவரும் நிலையில், அதிகாரிகளின் செயலால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். எனவே, எளிய ஆவணங்களைக் கொண்டு இழப்பீடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.