சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவிலில் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஜூன் 2021, 8:59 pm

சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு திமுக மாவட்டச் செயலா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்து, அலுவலகத்தை திறந்தாா். முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளையொட்டி கட்சித் தொண்டா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அலுவலகத்தில் கருணாநிதி உருவப்படத்தை எம்எல்ஏ ஈ.ராஜா திறந்தாா். மேலும் அலுவலக வளாகத்தில் எம்எல்ஏ, மாவட்டச் செயலா் ஆகியோா் மரக்கன்றுகள் நட்டனா். இதையடுத்து 10,14 ஆவது வாா்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில், தனுஷ் எம். குமாா் எம்.பி. மதிமுக மாவட்டச் செயலா் தி.மு.ராஜேந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் உ.முத்துப்பாண்டியன், பாா்வா்டு பிளாக் மாவட்டச் செயலா் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.