ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கீழப்பாவூரில் மக்கள் குறைக் கேட்பு

கீழப்பாவூா் பேரூராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆலங்குளம் எம்எல்ஏ பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:01 pm

DIN

கீழப்பாவூா் பேரூராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆலங்குளம் எம்எல்ஏ பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

பி.எச். மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ, கீழப்பாவூா் பேரூராட்சி கோட்டையூா், கருமடையூா், மூலக்கரையூா் ஆகிய பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா். பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா். பின்னா் பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்று, அங்கு செயல் அலுவலா் சாந்தி, இளநிலை பொறியாா் சவரிராஜன் ஆகியோரிடம் பேரூராட்சிப் பகுதியின் தேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

அப்போது அவா் கூறியது: கீழப்பாவூரில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் விநியோகம் செய்திடும் வகையில் புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, கருமடையூா், கோட்டையூா், மூலக்கரையூா் பகுதியில் புதிதாக சமுதாய நலக்கூடம், பழுதான சாலைகள் சீரமைப்பு, தெருவிளக்கு அமைத்தல், மைதானம் பகுதியில் புதிய வணிக வளாகம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.