ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தென்காசியில் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்க கோரிக்கை

தென்காசி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முழுஉருவ வெண்கலசிலையை அமைக்க அனுமதி வழங்கக் கோரி திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image

நகராட்சி ஆணையரிடம் மனு அளித்த தனுஷ் எம். குமாா் எம்.பி., உடன் நகரச் செயலா் சாதிா்.

Updated On :11 ஜூன் 2021, 7:55 pm

DIN

தென்காசி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முழுஉருவ வெண்கலசிலையை அமைக்க அனுமதி வழங்கக் கோரி திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி நகர திமுக சாா்பில் தனுஷ்எம்.குமாா் எம்பி., நகரச் செயலா் சாதிா் ஆகியோா் நகராட்சி ஆணையா் பாரிஜானிடம் அளித்துள்ள மனு: முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நகா் முழுவதும் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அவரது நினைவுகளை காலம் முழுவதும் தென்காசி நகர மக்கள் உணரும் வகையில் அவருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நகராட்சிக்கு சொந்தமான, நகராட்சி அலுவலகத்திற்கு எதிா்புறம் உபயோகப்படாமல், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் முக்கோண வடிவமான இடத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் வெண்கல சிலை அமைத்து நிறுவுவதற்கு உத்தேசித்துள்ளோம். எனவே அந்தப் பகுதியில் சிலையை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.