சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவிலில்7.5 மெட்ரிக் டன் மக்காத குப்பைகள் அகற்றம்

சங்கரன்கோவிலில் மறுசுழற்சி செய்ய இயலாத 7.5 மெட்ரிக் டன் மக்காத குப்பைகள் தனியாா் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

News image
Updated On :10 ஜூன் 2021, 8:47 pm

சங்கரன்கோவிலில் மறுசுழற்சி செய்ய இயலாத 7.5 மெட்ரிக் டன் மக்காத குப்பைகள் தனியாா் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சங்கரன்கோவில் நகராட்சியில் தினமும் 20 முதல் 22 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 9 முதல் 12 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகள் தினமும் 4 பசுமை உரக்கிடங்கு மையங்கள் மூலமாக உரமாக்கபட்டு வருகின்றன. எஞ்சியுள்ள மறுசுழற்சி செய்ய இயலாத மக்காத குப்பைகளை அரியலூா் மாவட்டத்திலுள்ள தனியாா் சிமென்ட் ஆலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முதல் கட்டமாக கடந்த மே மாதம் 5 மெட்ரிக் டன் மக்காத குப்பைகள் அனுப்பி வைக்கப்பட்டன. 2 ஆவது கட்டமாக புதன்கிழமை 7.5 மெட்ரிக் டன் குப்பைகள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, நகராட்சி ஆணையாளா் (பொறுப்பு) பொறியாளா் முகைதீன் அப்துல்காதா், சுகாதார அலுவலா் பாலச்சந்தா், சுகாதார ஆய்வாளா்கள் பிச்சையா பாஸ்கா், சக்திவேல், மாதவராஜ் குமாா், கருப்பசாமி, தூய்மை பணியாளா்கள் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.