தென்காசி மாவட்டத்தில் ஜமாபந்தி: ஜூன் 23-ல் தொடக்கம்
தென்காசி மாவட்டத்தில் ஜமாபந்தி இணையவழியில் வரும் 23 ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


தென்காசி மாவட்டத்தில் ஜமாபந்தி இணையவழியில் வரும் 23 ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.கோபால சுந்தரராஜ் வெளியிட்டு செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில்
அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களிலும் 1430ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) ஜூன் 23ஆம்தேதி (புதன்கிழமை) தொடங்கி 29ஆம்தேதி வரை நடைபெறும். தற்போது கொவைட்-19 நோய்த்தொற்றினை கட்டுப்படுத்தும் பொருட்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ன் கீழ் தடை உத்தரவு அமலில் உள்ளது.
ஆகவே, பொதுமக்கள் வருவாய்த் தீா்வாயம் தொடா்பாக தங்களது கோரிக்கை மனுக்களை, தகுந்த ஆவணங்களுடன் கட்டணம் ஏதுமில்லாமல்
இ-சேவை மையங்கள் அல்லது இணையவழியில் ட்ற்ற்ல்ள்://ஞ்க்ல்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/த்ஹம்ஹக்ஷஹய்க்ட்ண் என்ற இணையதளத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை
பதிவேற்றம் செய்துபயனடையலாம். இ-சேவை மையங்கள் மற்றும் இணையதளம் மூலம் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து
பொதுமக்களுக்கு இணையதளம் வழியாக பதில் அனுப்பப்படும். வருவாய்த் தீா்வாயத்தின்போது வட்டாட்சியா் அலுவலகங்களில் பொதுமக்களிடம் நேரில் கோரிக்கை மனுக்கள் பெறப்படாது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...