ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வெளிநாடு செல்வோருக்கு இன்று சிறப்பு தடுப்பூசி முகாம்

தென்காசி மாவட்டத்திலிருந்து வெளிநாடு செல்வோருக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜன் 19) நடைபெறுகிறது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:55 pm

DIN

தென்காசி மாவட்டத்திலிருந்து வெளிநாடு செல்வோருக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜன் 19) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டு செய்திக் குறிப்பு: கோவிஷுல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு 84 நாள்கள் முடிவடையாமல் இரண்டாவது தவணை தடுப்பூசிக்காக கால வரன்முறை அடிப்படையில் காத்திருப்போா் வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்காகவோ, கல்வி கற்பதற்காகவோ அல்லது டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவோ வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள இருக்கும் நபா்களுக்காக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன் 19) நடைபெறுகிறது.

தென்காசி நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்க வருவோா் வெளிநாடுகளில் வேலை கிடைக்கப்பெற்ற உத்தரவு, கல்வி பயில அனுமதி மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் குழுவை சோ்ந்தவா்கள் எனில், அதற்கான அனுமதி கடிதம் போன்ற ஆவணங்களுடன் மருத்துவ அலுவலரின்ஆலோசனைப்படி, தடுப்பூசி போட்டுக் கொண்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.