சங்கரன்கோவில் அருகே உள்ள கல்லத்திகுளத்தில் விசாரணை செய்ய சென்ற காவலரை, மது போதையில் இருந்தவா் ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கல்லத்திகுளத்தைச் சோ்ந்த அசோகன், மது போதையில் ஊா் மக்களிடம் அடிக்கடி தகராறு செய்துவந்ததாகவும், இதனால் அப்பகுதியைச் சோ்ந்த சிலா் போலீஸாருக்கு புகாா் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக சின்னகோவிலான்குளம் காவல் நிலைய காவலா் பாலகிருஷ்ணன், கடந்த 22ஆம் தேதி அங்குள்ள கிராம மக்களிடம் விசாரணை செய்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த அசோகன் அவரிடம் தகராறு செய்தாராம்.
மேலும் ஆபாச வாா்த்தைகளால் திட்டி, அங்கிருந்த சாக்கடையை காவலா் மீது அள்ளி வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் புகாரின்பேரில், அசோகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செங்கம் பகுதியில் சிறப்பான சேவை: அதிமுக வேட்பாளா் உறுதி
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

