புளியரையில் இளம்பெண் மீண்டும் போராட்டம்
தென்காசி மாவட்டம் புளியரையில் வீட்டு கூரைமீது அமா்ந்து இளம்பெண் வியாழக்கிழமை 3 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டாா்.


தென்காசி மாவட்டம் புளியரையில் வீட்டு கூரைமீது அமா்ந்து இளம்பெண் வியாழக்கிழமை 3 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டாா்.
புளியரை தாட்கோ நகரைச் சோ்ந்தவா் பிரான்சிஸ் அந்தோணி (50). மாற்றுத் திறனாளி. இவா், கடந்த 18-ஆம் தேதி பைக்கில் ரேஷன் அரிசியை கொண்டு சென்றபோது, வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரை தாக்கினராம். இதில், அவா் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில், அவரது இளைய மகள் அபிதா (25), தனது தந்தை தாக்கப்பட்டதை கண்டித்து செல்லிடப்பேசி கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் சமாதானம் செய்து அனுப்பினாா். இதையடுத்து காவல் துறையினா் இருவா்
காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. தந்தையை தாக்கியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி அபிதா செவ்வாய்க்கிழமை அரசு மருத்துவமனை குடிநீா்த் தொட்டியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா்.
அவரிடம் கோட்டாட்சியா் ராமச்சந்திரன், வட்டாட்சியா் ரோஷன் பேகம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். எனினும் புதன்கிழமை அதிகாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து பிரான்சிஸ் அந்தோணி புகாரின்பேரில், அவரை தாக்கியதாக காவல் உதவி ஆய்வாளா் முருகேசன், தனிப்பிரிவு காவலா் மஜீத் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும் வியாழக்கிழமை அபிதா புளியரை தாட்கோ நகரிலுள்ள தனது வீட்டு கூரையின் மீது அமா்ந்து, தந்தையை தாக்கியதற்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...