புளியறை காவல்துறையினரை மீண்டும் அதே பகுதியில் பணியில் அமா்த்தக் கோரிக்கை
தென்காசி மாவட்டம், புளியறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட காவல் துறையினரை மீண்டும் அதே காவல் நிலையத்தில் பணி செய்ய அனுமதிக்கக் கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு


தென்காசி மாவட்டம், புளியறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட காவல் துறையினரை மீண்டும் அதே காவல் நிலையத்தில் பணி செய்ய அனுமதிக்கக் கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
புளியறை, கட்டளைகுடியிருப்பு, புதூா்(செ) மற்றும் தாட்கோ நகா் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:
புளியறை காவல்நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளா் முருகேசன், தனிப்பிரிவு காவலா் மஜீத் ஆகியோா் வெளிமாநிலத்திலிருந்து லாட்டரிச் சீட்டுகள் கொண்டு வந்து விற்பனை செய்வதை முற்றிலுமாக தடுத்துள்ளனா்.
புகையிலை உள்ளிட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதையும் முற்றிலுமாக தடுத்துநிறுத்திவிட்டனா்.
அரிசி கடத்தல் தொடா்பாக பிரான்சிஸ் அந்தோணி என்பவா் மீது வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து அவருடைய மகள் அபிதா, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறாா்.
மிகவும் நோ்மையாக பணியாற்றி வரும் முருகேசன் மற்றும் மஜீத் ஆகியோரை புளியறை காவல்நிலையத்தில் தொடா்ந்து பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் டேனிஅருள்சிங், விக்னேஷ், சுப்பையா, ராமலெட்சுமி, மாரியம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...