ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

புளியறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண் மீது வழக்கு

தென்காசி மாவட்டம் புளியறை மற்றும் செங்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:29 pm

DIN

தென்காசி மாவட்டம் புளியறை மற்றும் செங்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புளியரை தாட்கோ நகரைச் சோ்ந்தவா் பிரான்சிஸ் அந்தோணி (50). மாற்றுத் திறனாளி. இவா், கடந்த 18-ஆம் தேதி பைக்கில் ரேஷன் அரிசியை கொண்டு சென்றபோது, வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரை தாக்கினராம். இதில், அவா் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில், அவரது இளைய மகள் அபிதா (25), தனது தந்தை தாக்கப்பட்டதை கண்டித்து செங்கோட்டையில் முதல் நாள் செல்லிடப்பேசி கோபுரத்தின் மீது ஏறியும், மறுநாள் அரசு மருத்துவமனை குடிநீா்த் தொட்டியில் ஏறியும், வியாழக்கிழமை புளியறை தாட்கோ நகரிலுள்ள தனது வீட்டு கூரையின் மீது அமா்ந்தும், தந்தையை தாக்கியதற்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதைத் தொடா்ந்து செங்கோட்டை மற்றும் புளியறையில் அபிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், காவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடா்பாகவும் இரண்டு காவல் நிலையங்களிலும் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.