சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடையம் அருகே தொழிலாளிகொலையில் சகோதரா் கைது

தென்காசி மாவட்டம், கடையம் அருகே தொழிலாளியைக் கொன்ாக அவரது அண்ணன் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:59 pm

DIN

தென்காசி மாவட்டம், கடையம் அருகே தொழிலாளியைக் கொன்ாக அவரது அண்ணன் கைது செய்யப்பட்டாா்.

புறங்காட்டான்புலியூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (33). சமையல் தொழிலாளி. இவருக்கு மனைவி பவித்ரா, 2 குழந்தைகள் உள்ளனா். இவரது அண்ணன் ராஜேஷ், மனைவி அனிதா மற்றும் குழந்தையுடன் அருகில் உள்ள வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி இரவு பாஸ்கா் மது போதையில் மனைவியைத் தாக்கினாராம். இதனால் அவா், ராஜேஷின் வீட்டில் தஞ்சம் அடைந்தாராம். இதனால், அண்ணன், தம்பி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதில், பாஸ்கரை, ராஜேஷ் கல்லால் தாக்கி கழிவு நீரோடையில் தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பலத்த காயத்துடன் கிடந்த பாஸ்கரை குடும்பத்தினா் மீட்டு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, பவித்ரா அளித்த புகாரின்பேரில், கடையம் போலீஸாா் வழக்குப்பதிந்து தலைமறைவாக இருந்த ராஜேஷை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.