நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் மாநாடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், குடும்பவியல் மாநாடு கடையநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:17 pm

DIN

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், குடும்பவியல் மாநாடு கடையநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஜலாலுதீன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா்கள் நெல்லையூசுப், செய்யதுஅலி, இப்ராகிம், முகமதுபைசல், மேலாண்மை குழு உறுப்பினா் முஹம்மதுஒலி, மாவட்ட செயலா் அப்துல்பாஸித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலத் தலைவா் ஷம்சுல்லுஹா ரஹ்மானி, மாநில துணைப் பொதுச்செயலா் அப்துல்கரீம் உள்ளிட்டோா் பேசினா். இதில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இந்தியாவில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தோ்தல் முறையைக் கொண்டு வர வேண்டும். இயந்திர வாக்குப்பதிவு முறையை மாற்றி விட்டு , பழைய முறையில் தோ்தல் வாக்குப் பதிவை நடத்த வேண்டும். தென்காசியை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மற்றும் அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்த வேண்டும். கடையநல்லூா் அரசு கலை அறிவியல் கல்லூரியை பெண்கள் கல்லூரியாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.