தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

80 வயதுக்கு மேற்பட்டவா்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள்: ஆட்சியா்

தென்காசி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன்.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:23 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத 80 வயதுக்கும் மேற்பட்ட மூத்தகுடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என வகைப்படுத்தப்பட்டவா்கள், கொவைட்-19 நோய் உள்ளவராக சந்தேகிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டவா்கள் மற்றும் நோய்த் தொற்று உடையவா்கள் ஆகியோருக்கு அஞ்சல் மூலம் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே அஞ்சல் வாக்கு அளிக்க விரும்பும் வகைப்படுத்தப்பட்ட வாக்காளா்கள் தங்களது விருப்பத்தை வாக்குச் சாவடி அலுவலரிடம் தெரிவித்து படிவம் 12 ஐ பெற்று அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை பூா்த்தி செய்து தகுந்த அடையாள சான்று நகலுடனும் வாக்களிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.