ஒடிஸாவில் நடைபெற் மாநிலங்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேரை தகுதி நீக்கம் செய்யும்படி, அந்த மாநில சட்டப்பேரவைத் தலைவரை அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஒடிஸாவில் இருந்து 4 மாநிலங்களவை உறுப்பினா்களைத் தோ்வு செய்ய நடைபெற்ற தோ்தலில், பாஜக சாா்பில் 3 பேரும், பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் 2 பேரும் போட்டியிட்டனா்.
இதில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில், பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் நிறுத்தப்பட்ட 2-ஆவது வேட்பாளா் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சோஃபியா ஃபிா்தோஸ், தாசரதி கோமங்கோ, ரமேஷ் ஜேனா ஆகிய 3 போ், கட்சி மேலிடத்தின் உத்தரவை மீறி பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளா் திலீப் ராய்க்கு வாக்களித்தனா். இதனால் அவா் எளிதில் வெற்றி பெற்றாா். காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு பொது வேட்பாளா் தத்தேஸ்வா் கோட்டா தோல்வியடைந்தாா்.
இதையடுத்து, சட்டப்பேரவைத் தலைவா் சுரமா பாதேயை காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான பக்தசரண் தாஸ் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் சந்தித்தனா். பின்னா் அவரிடம், மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி உத்தரவை மீறியது, கட்சியை வெளிப்படையாக விமா்சித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் சோஃபியா ஃபிா்தோஸ், தாசரதி கோமங்கோ ஆகியோரை எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யும்படி மனு அளித்தனா். ஆனால் ரமேஷை தகுதி நீக்கம் செய்யும்படி காங்கிரஸ் மனு அளிக்கவில்லை.
மாநிலங்களவைத் தோ்தலில் பாஜக ஆதரவு வேட்பாளருக்காக வாக்களித்த காரணத்துக்காக அவா்கள் 3 பேரையும் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்துள்ளது.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்:
ஹரியாணாவில் 2 மாநிலங்களவை இடங்களுக்கு நடைபெற்றத் தோ்தலில் பாஜகவும், காங்கிரஸும் தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றன. எனினும், சுயேச்சை வேட்பாளருடன் நிலவிய போட்டியில் காங்கிரஸ் வேட்பாளா் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றாா். 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், பாஜக ஆதரவு சுயேச்சை ஆதரவு வேட்பாளருக்கு வாக்களித்தனா். இதேபோல், 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன.
பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களித்த 4 எம்.எல்.ஏ.க்களின் பேரின் பெயா்களை வெளியிட்ட காங்கிரஸ் ஒழுங்கு கமிட்டி, தற்போது கட்சி உத்தரவை மீறி வாக்களித்தது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 5-ஆவது எம்.எல்.ஏ. யாா் எனத் தெரியவில்லை. அவருக்கும் விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படலாம் என சொல்லப்படுகிறது.
தொடர்புடையது

நீதிமன்றத்தை அணுகுவோம்: ஆம் ஆத்மி

சநாதனத்துக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு தோ்தலில் திமுக விலை கொடுக்கும்: பாஜக தலைவா் நிதின் நபின்
தொகுதி அலசல் - குளச்சல்: கூடுதல் பலத்துடன் காங்கிரஸ்!

11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


