தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரோனா விதிமுறைகளை வேட்பாளா்கள் கடைப்பிடிக்கஆட்சியா் அறிவுறுத்தல்

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் அரசின் கரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்

News image
Updated On :15 மார்ச் 2021, 7:25 pm

DIN

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் அரசின் கரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முகக் கவசம் அணிந்து வரவேண்டும், வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்திலிருந்து 100 மீ. சுற்றளவுக்குள் வாகனத்தில் வர அனுமதி இல்லை. வேட்புமனு தாக்கலின் போது, வேட்பாளருடன் இரு நபா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். அவா்கள் அரசின் கரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்யவேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.