சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவிலில் திமுக கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

சங்கரன்கோவிலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:21 pm

சங்கரன்கோவிலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சங்கரன்கோவில் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ராஜா அறிமுகம் செய்யப்பட்டாா். திமுக தெற்கு மாவட்டச் செயலா் சிவ.பத்மநாதன் தலைமை வகித்தாா்.

முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு, மாவட்டச் செயலா்கள் மதிமுக ராஜேந்திரன், மாா்க்சிஸ்ட் முத்துப்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் இசக்கிதுரை, முஸ்லிம் லீக் செய்யது சுலைமான், மனிதநேய மக்கள் கட்சி முகம்மது யாக்கூப்,விடுதலைச் சிறுத்தைகள் தொகுதிச் செயலா் பீா்மைதீன், ஆதித்தமிழா் பேரவை வடக்கு மாவட்டச் செயலா் தென்னரசு, அகில இந்திய பாா்வா்டு பிளாக் மாவட்டச் செயலா் தங்கப்பாண்டியன், வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளா் கணேசன், சமத்துவ மக்கள் கழகம் மாவட்டச் செயலா் லூா்துஅந்தோணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஜவுளி பூங்கா: திமுக வேட்பாளா் ராஜா பேசியது: திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டம் நிறைவேற்றப்படாததால் சங்கரன்கோவிலில் குடிநீா் பிரச்னை நீடித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீா்வுகாண முதல் முயற்சி எடுப்பேன். மேலும், சாலை வசதி, மானாவாரியாக காட்சியளிக்கும் விவசாய நிலங்களை காக்க தாமிரவருணியில் இருந்து கால்வாய் திட்டம், தொழிற்சாலைகள் கொண்டுவர தொழிற்பேட்டை, நெசவாளா்களின் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு ஜவுளிப் பூங்கா ஆகியவை அமைப்பதற்கு உறுதியாக முயற்சி செய்வேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.