தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

செம்பியன் மாரத்தான் போட்டி: குத்துக்கல் வலவசை பள்ளி மாணவா் சிறப்பிடம்

செம்பியன் மாரத்தான் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் பாரத் முதலிடம் பெற்றாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:24 pm

DIN

செம்பியன் மாரத்தான் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் பாரத் முதலிடம் பெற்றாா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியசாமியாபுரம் ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிக் பள்ளி சாா்பில் செம்பியன் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன. 12 வயது முதல் 17 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான 8 கி.மீ. மாரத்தான் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் எம்.எஸ்.பாரத் முதலிடம் பெற்றாா். இவருக்கு பதக்கம் மற்றும் ரூ.2ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவா் பாரத்தை ஆக்ஸ்போா்டு கல்விக் குழும சட்ட ஆலோசகா் கே.திருமலை, செயலரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போா்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் தி.மிராக்ளின் பால்சுசி, பள்ளித் தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை க.சுப்பம்மாள், நிா்வாக அலுவலா் கே.எஸ்.கணேசன், நிகில் சிற்றரசு மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.