தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தென்காசியில் அதிமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:23 pm

DIN

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் போட்டியிடுகிறாா். அவா், தென்காசி கோட்டாட்சியா் ராமச்சந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அவருடன், அதிமுக வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் கே.பி.குமாா்பாண்டியன், பாஜக தொகுதி அமைப்பாளா் ராஜேஷ்ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதியில் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம், 50ஆண்டுகால கோரிக்கையான ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், இரட்டைக்குளம் கால்வாய் திட்டம், ரூ.119 கோடி மதிப்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.

மேலும், இத்தொகுதியில் மருத்துவக் கல்லூரி கொண்டு வருவதே என்னுடைய முதல்பணி. தென்காசி தொகுதிக்கு என்ன தேவைகள் என்பது குறித்து கண்டறிந்து அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவேன் என்றாா்அவா்.

இதில், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலா் சங்கரபாண்டியன், பேரூா் கழக செயலா்கள் காா்த்திக்குமாா், க ணேஷ்தாமோதரன், மயில்வேலன், நகரச் செயலா் சுடலை, பாஜக மாவட்டத் தலைவா் ராமராஜா, துணைத் தலைவா் முத்துகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சொத்து விவரம்: அவரது பெயரில் ரூ. 33 லட்சத்து 69ஆயிரம் 732 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.3 கோடியே 44லட்சத்து 31ஆயிரத்து 73 மதிப்பில் அசையா சொத்துகளும், ரூ.1 கோடியே52 லட்சத்து 527 மதிப்பில் கடனும், ரூ.1லட்சத்து 50 ஆயிரம் ரொக்கமும், மனைவி ஜெகதா பெயரில் ரூ. 57லட்சத்து 42 ஆயிரத்து 34 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 43 லட்சத்து 99ஆயிரத்து 974 மதிப்பில் அசையா சொத்துகளும், ரூ. 35 லட்சத்து 51ஆயிரத்து 130 மதிப்பில் கடனும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.