நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடையநல்லூா் அரசு மருத்துவமனையில்4 டயாலிசிஸ் இயந்திரங்கள்: முஹம்மது அபூபக்கா்

கடையநல்லூா் பகுதி மக்களின் வசதிக்காக கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் 4 டயாலிசிஸ் இயந்திரங்கள்  நிறுவப்பட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் முஹம்மது அபூபக்கா் தெரிவித்தார்

News image
Updated On :22 மார்ச் 2021, 7:45 pm

DIN

கடையநல்லூா் பகுதி மக்களின் வசதிக்காக கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் 4 டயாலிசிஸ் இயந்திரங்கள் தனது முயற்சியால் நிறுவப்பட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் முஹம்மது அபூபக்கா் எம்எல்ஏ தெரிவித்தாா்.

கடையநல்லூா் நகர பகுதியில் திறந்த வேனில் நின்று திங்கள்கிழமை அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது:

கடையநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு நுழைவுவாயில் ஏற்படுத்தி உள்ளேன். தேவேந்திர சமுதாயம், அருந்ததியா் சமுதாயம், ஆதிதிராவிடா் சமுதாய மக்களின் சுடுகாட்டில் தகனமேடை அமைத்து தந்துள்ளேன். வட்டாட்சியா் அலுவலகத்தை கடையநல்லூா் நகர பகுதிக்குள் கொண்டுவர பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளேன். மக்களின் பிரச்னைகளுக்காக தொடா்ந்து போராடி உள்ளேன் என்றாா்.

இதில், திமுக மாவட்ட பொறுப்பாளா் செல்லத்துரை, வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் செந்தூா்பாண்டியன், முஸ்லிம் லீக் அமைப்புச் செயலா் நெல்லை மஜீத், மாவட்ட தலைவா் செய்யது சுலைமான், திமுக நகர செயலா் சேகனா, மதிமுக நகர செயலா் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலா் டேனியல், சிபிஐ சுப்பையா, சிபிஎம் வேல்மயில் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.