சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவிலில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி

சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:19 pm

சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தொகுதியில் பயன்படுத்தப்படும் வகையில் 438 வாக்குப் பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 478 விவிபேட் இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் தனி அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.

சீல் வைக்கப்பட்டிருந்த அந்த அறையை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலரான வட்டாட்சியா் முருகசெல்லி திறந்தாா்.

இதையடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

மண்டலத் துணை தோ்தல் அலுவலா் உள்ளிட்ட தலா 3 போ் வீதம் 27 மேஜைகளில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராம்குமாா், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் மாரியப்பன், திமுக சாா்பில் நகரச் செயலா் சங்கரன், வழக்குரைஞா் அன்புச்செல்வன், போ. சங்கா், அமமுக சாா்பில் வைரமுத்து, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சின்னங்கள் பொருத்தும் பணியை பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.