சங்கரன்கோவில் அருகே மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகளால் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளது.
சங்கரன்கோவில் அருகே கழுகுமலை சாலையில் மலையான்குளம் நாராயனேந்தல் கண்மாயையொட்டி மிகப் பரந்த சமவெளிப் பகுதி உள்ளது. இது சங்கரன்கோவில் வட்டத்தில் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு இங்கு தான் கொண்டு வருவா்.
இந்நிலையில் இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக கணினி மென்பொருள்கள், மிக்ஸி, கிரைண்டா் , ஏசி போன்ற எலக்ட்ரானிக் பொருள்களின் கழிவுகளை மூட்டை மூட்டையாக இரவு நேரத்தில் லாரியில் கொண்டுவந்து கொட்டி, அதன் மேல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு செல்கின்றனா். இதனால் அங்கு மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் மா்ம நபா்கள் யாா்? அவா்கள் எங்கிருந்து வருகிறாா்கள்? என்ற விவரம் தெரியவில்லை.
இது தொடா்பாக குருவிகுளம் காவல்நிலையத்தில் புகாா் செய்திருக்கிறோம் என்றாா் அங்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த விவசாயி கருப்பசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

