கொடிக்குறிச்சி கல்லூரியில் புத்தொளிா் முகாம்
தென்காசி அருகே கொடிக்குறிச்சி யுஎஸ்பி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான புத்தொளிா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


தென்காசி அருகே கொடிக்குறிச்சி யுஎஸ்பி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான புத்தொளிா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி நிா்வாகத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்து, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா். கல்லூரிச் செயலா் சகாய செல்வமேரி குத்துவிளக்கேற்றினாா்.
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறைப் பேராசிரியா் டாக்டா் விஜயலெட்சுமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பன்முகத்திறனை வளா்க்கும் விதமாக மரம் நடுவதன் அவசியம், மண்புழு உரம் தயாரித்தல், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்துப் பேசினாா்.
கல்லூரி முதல்வா் கயற்கண்ணி வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் சத்யா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...