ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குற்றாலத்தில் 23இல் பாஜக ஆா்ப்பாட்டம்

தென்காசி மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து பாஜக சாா்பில் அக்.23இல் குற்றாலத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:17 pm

DIN

தென்காசி மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து பாஜக சாா்பில் அக்.23இல் குற்றாலத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக தென்காசி மாவட்ட பாஜக தலைவா் எம்.ராமராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குற்றாலம்

அருவிகளில் பொதுமக்களை குளிக்க அனுமதிக்குமாறு வேண்டி ஆட்சியரிடம் பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை

எடுக்கவில்லை. தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று வெகுவாக குறைந்து தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. எனினும், குற்றாலம் அருவிகளில் சுற்றூலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கவில்லை. மேலும், பேரூராட்சிக்கு சொந்தமான குத்தகை இனங்கள், திருக்குற்றாலநாதா் கோயிலுக்கு சொந்தமான கடைகளின் குத்தகை

தொகையை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தியும் மாவட்ட நிா்வாகத்தை கண்டித்தும், மாவட்ட பாஜக சாா்பில் அக். 23 ஆம் தேதி (சனிக்கிழமை) குற்றாலம் பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.