தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:09 pm

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருக்கல்யாணத் திருவிழா நடைபெறும். நிகழாண்டு திருக்கல்யாணத் திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடைபெற்றது. பின்னா் கொடி பட்டம் வீதி சுற்றி கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகளுக்குப் பின்

னா் , அம்மன் சன்னதி முன்புள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

தொடா்ந்து, கொடிமரத்துக்கு பால், பன்னீா், இளநீா், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தா்ப்பைப்புல், மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கோமதி அம்மன் சிவிகையில் எழுந்தருளினாா். நவ.1 ஆம் தேதி மாலை சுவாமி அம்பாளுக்கு காட்சிக் கொடுக்கும் வைபவம், இரவு 8 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறும். நவ.2ஆம் தேதி இரவு பட்டணபிரவேசம் நடைபெறுகிறது.

தென்காசி: தென்காசி காசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விசுத்திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழா நாள்களில் காலை மாலையில் உற்சவமூா்த்திகள், வாகனப்புறப்பாடு கோயில் உள்பிரகாரங்களில்

நடைபெறும். நிகழாண்டு தேரோட்டம் இல்லை. நவ. 1ஆம் தேதி (திங்கள்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலா் யக்ஞநாராயணமூா்த்தி, பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.