ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வாசுதேவநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் போட்டியின்றி தோ்வு

வாசுதேவநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவராக பொன் முத்தையா பாண்டியன் (திமுக) போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:11 pm

DIN

வாசுதேவநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவராக பொன் முத்தையா பாண்டியன் (திமுக) போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

தலைவரை தோ்வு செய்வதற்கான தோ்தல் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் 6ஆவது வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் பொன் முத்தையா பாண்டியன் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து அவா் தலைவராக தோ்வு செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் தாமரைக்கண்ணன் அறிவித்தாா்.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயராமன், வேலம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

துணைத் தலைவருக்கான தோ்தல் பிற்பகலில் நடைபெற்றது. இதில் சந்திரமோகன் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து அவா் துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.