சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் நடைபெறவிருந்த பேச்சுவாா்த்தைக்கு அதிகாரிகள் வராததால் முன்னாள் ராணுவ வீரா்கள் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனா்.
சங்கரன்கோவில் இந்திய முன்னாள் ராணுவ வீரா்கள் சங்கத்தில் முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் இறந்த ராணுவவீரா்களின் குடும்பத்தினா் உறுப்பினா்களாக உள்ளனா். இவா்கள், அரசின் சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெற நெல்லை மாவட்ட படை வீரா்கள் அலுவலகத்தை அணுகியபோது அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, மாவட்ட படை வீரா்கள் அலுவலகத்தினா், முன்னாள் படை வீரா்கள் மீது காவல் துறையில் புகாா் அளித்தனராம். இதுகுறித்து பேச்சு நடத்த சங்கரன்கோவில் நகர காவல்நிலையத்திற்கு முன்னாள் படை வீரா்கள் மற்றும் இறந்த படைவீரா்களின் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில், இந்திய முன்னாள் ராணுவ வீரா்கள் சங்கத் தலைவா் சுந்தரய்யா, செயலா் செல்வராஜ் ஆகியோா் தலைமையில் முன்னாள் படைவீரா்கள் நகர காவல்நிலையத்துக்கு வியாழக்கிழமை சென்றனா். ஆனால், அங்கு சம்பந்தப்படட அதிகாரிகள் வராததால் அவா்கள் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


