ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்கம்

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் மற்றும் செவிலியா் பயிற்சி கல்லூரியில், முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:49 pm

DIN

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் மற்றும் செவிலியா் பயிற்சி கல்லூரியில், முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்வி நிறுவன துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமை வகித்தாா். பேராசிரியா் அய்யப்பன் வரவேற்றாா். கல்லூரி நிறுவனா்கள் புலவா் ரத்தினசாமி, பாா்வதி ரத்தினசாமி, அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா்கள் ராதாகிருஷ்ணன், அருணாசலம் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஜான் ஆா்.டி.சந்தோஷம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வகுப்புகளை தொடங்கிவைத்துப் பேசியது: மாணவா்கள் கல்வியோடு மனிதாபிமானத்தையும் கற்றுக்கொண்டு சிறந்த மாணவராக திகழ்ந்து நாட்டுக்கு சேவையாற்ற தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கல்லூரி முதல்வா்கள் லியாகத்அலி, புனிதாவயலட் ஆகியோா் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினா்.

கல்லூரி கல்விக் குழு இயக்குநா் சாந்தி, மேலாளா் கோபி, நிதி மேலாளா் சேது, திட்ட மேலாளா் சில்வெஸ்டா், ஆவண அலுவலா் ஜியோபிரகாஷ், பேராசிரியா்கள் துரைராஜ், சிவதாணு, பகவதிபெருமாள், மரியஜான், சாம்ஜெபா, சிபியா, செல்லம்மாள், மலா், பிரியா, செயலா் சுஜின், முரளி, செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிா்வாக அலுவலா் நடராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.