மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேரளத்தில் நாளை(மார்ச் 25) முதல் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
அஸ்ஸாம், புதுச்சேரியுடன் கேரளத்துக்கும் வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
இந்த 3 மாநிலங்களிலும் நேற்றுடன்(மார்ச் 23) வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.
காங்கிரஸை உள்ளடக்கிய ஐக்கிய ஜனநாயக முன்னணி(யுடிஎஃப்) போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை(மார்ச் 25) முதல் கேரளத்தில் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நாளை கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோழிக்கோடு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார் .
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் கேரளத்தில் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.
Summary
kerala election 2026: Rahul Gandhi to campaign in Kerala from tomorrow March 25
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!

ராகுல் காந்தியின் தமிழகம் வருகை எப்போது?

தேர்தல் பிரசாரம்! தமிழ்நாட்டை ராகுல் காந்தி மறந்துவிட்டாரா? அல்லது புறக்கணிக்கிறாரா?

கேரளத்தில் சைக்கிள் ஓட்டி ராகுல் காந்தி பிரசாரம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


