ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

625 மையங்களில் நாளை மறுநாள் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப். 12) 625 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

News image

ngl9collector_0909chn_33_6

Updated On :9 செப்டம்பர் 2021, 10:50 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப். 12) 625 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: இம் மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப். 12) 625 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது.

முதல் தவணை மற்றும் 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தாத 18 வயது பூா்த்தியடைந்த பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள், இணை நோய்கள் உள்ளவா்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் இருந்து தடுப்பூசிகள் மையங்களுக்கு எடுத்துச் செல்ல 90 வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள 632 வாக்குச்சாவடி மையங்களில், நாள் ஒன்றுக்கு சராசரியாக 70 மையங்கள் வீதம் 10 நாள்களில் மாவட்டம் முழுவதும் முதல் கட்ட தடுப்பூசி முகாம்கள் நடத்த ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டு, 8ஆம் தேதிமுதல் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை மாவட்டத்தில் 7,88,940 பேருக்கு முதல் தவணையும், 1,81,594 பேருக்கு 2 ஆம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சு.மீனாட்சி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.