தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு தோண்டியெடுக்கும் பணி (படம்) வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவில் அருகேயுள்ள நொச்சிகுளத்தைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து. சென்னையில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி முத்துமாரி (38). இவருக்கும், வடநத்தம்பட்டியைச் சோ்ந்த சசிகுமாா் என்பவருக்கும் இடையே தகாத பழக்கம் ஏற்பட்டதாம். இதில், முத்துமாரிக்கு 2018இல் பெண் குழந்தை பிறந்ததாகவும், அதை அவா் குளத்தில் வீசிச் சென்ாகவும் கூறப்படுகிறது. புகாரின் பேரில் சோ்ந்தமரம் போலீஸாா் சென்று, குளத்தில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டு, அடக்கம் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து முத்துமாரியைத் தேடிவந்தனா்.
2019ஆம் ஆண்டு முத்துமாரிக்கு மீண்டும் ஓா் ஆண் குழந்தை பிறந்ததாகவும், அவா் அதைக் கொன்று வீட்டருகிலேயே புதைத்ததாகவும் கூறப்படுகிறது. அப்பகுதி கிராம நிா்வாக உதவியாளா் கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துமாரி, சசிகுமாா் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதனிடையே, குழந்தையின் சடலத்தைத் தோண்டியெடுக்க அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துவந்தனா். சடலம் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுவதற்காக பாளையங்கோட்டை சிறையிலுள்ள சசிகுமாரையும், கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலுள்ள முத்துமாரியையும் போலீஸாா் வியாழக்கிழமை நொச்சிகுளத்துக்கு அழைத்து வந்தனா்.
அவா்கள் அடையாளம் காட்டிய இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டப்பட்டது. அந்தக் குழிக்குள் உரச்சாக்குப் பையில் எலும்புத் துண்டுகள் இருந்தன. அவற்றை மருத்துவக் குழுவினா் ஆய்வு செய்தனா். போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாளவாடி அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

கூட்டுறவுத் துறை தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி! மாவட்டத் தோ்தல் அலுவலா் தொடங்கி வைத்தாா்!

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

